புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஒரு அரிய "நெருப்பு வளைய" சூரியக் கிரகண நிகழ்வு பதிவானது.
நிலவானது மிகவும் தொலைவில் இருப்பதால், அது சூரியனை முழுவதுமாக மறைக்க இயலாததால் "நெருப்பு வளையம்" போன்ற அமைப்பினை இந்த கிரகணம் உருவாக்குகிறது.
நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லும் பயணத்தில், அது நமது கிரகத்தில் இருந்து அதன் சேய்மைப் புள்ளியில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஒரு வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இது முழு சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சூரியனின் முகத்தை முழுமையாக மறைக்காது.
மாறாக, சந்திரனின் இருண்ட பகுதியைச் சுற்றி சூரியனின் வெளிப்புற விளிம்பினைக் காட்டும் வகையிலான ஒரு வளையம் போன்ற தோற்றத்தினை உருவாக்குகிறது.
முழு கிரகணம் ஆனது அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அடுத்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழ உள்ள முழு கிரகணத்திற்குப் பிறகு, 2044 ஆம் ஆண்டு வரை மற்றொரு கிரகணம் நிகழாது.