உலக வங்கி குழுவானது, சமீபத்தில் ‘Choosing Our Future: Education for Climate Action - நமது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்தல்: பருவநிலை நடவடிக்கைக்கான கல்வி’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் கணிசமான அளவில் கற்றலைச் சீர்குலைப்பதோடு, பருவநிலை தணிப்பு மற்றும் ஏற்பு அமைப்புகளுக்கு இளையோர்களுக்குப் பெரும் அதிகாரம் அளிக்கவும், அதற்கு ஏற்ப அவர்களைச் சித்தப்படுத்தவும் மற்றும் அவர்களின் திறன்களை அளிக்கவும் கல்வி முறை உதவுகிறது என்பதை வலியுறுத்துகிறது.
பருவநிலை தொடர்பான பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டப் பள்ளிகளில் ஆண்டிற்கு சராசரியாக 11 நாட்கள் அளவிலான பயிற்றுவிப்பு நாட்களை உலக நாடுகள் தற்போது இழக்கின்றன.
மிக குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் பருவநிலை மாற்ற விழிப்புணர்வு இன்னும் 65% மட்டுமே உள்ளது.
உலகளாவியப் பசுமை மாற்றங்களுக்குத் தேவையான 100 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளுக்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை.