மத்திய அரசானது, "பால் விவாஹ் முக்த் பாரத்" என்ற தேசிய அளவிலான ஒரு முக்கிய பிரச்சாரத்தினை துவக்கியுள்ளது.
குழந்தைத் திருமணத்திற்கு எதிரான இந்தப் பிரச்சாரம் ஆனது மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான், திரிபுரா, அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் கவனம் செலுத்தும்.
இதற்காக குழந்தைத் திருமணம் அற்ற பாரதம் எனும் இணைய தளமானது தொடங்கப் பட்டுள்ளது.
இந்த இயங்கலை வழி தளமானது குழந்தை திருமணச் சம்பவங்கள் குறித்து தகவல் அளிக்கவும், புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் (CMPO) பற்றிய பல தகவல்களை அணுகுவதற்கும் குடி மக்களுக்கு உதவுகிறது.
குடிமக்களுக்கு நன்கு அதிகாரம் அளிப்பதிலும், 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தினை அமல்படுத்துவதிலும் இந்த இணைய தளம் ஒரு குறிப்பிடத்தக்க படி நிலையாகும்.
2029 ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை சுமார் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
2006 ஆம் ஆண்டில் 47.4% ஆக இருந்த குழந்தை திருமண விகிதம் ஆனது 2019-21 ஆம் ஆண்டில் 23.3% ஆக குறைந்தது.