TNPSC Thervupettagam

‘பீமா டிரினிட்டி’ முன்னெடுப்பு

February 21 , 2025 6 days 39 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது 9 வது பீமா மாந்தன் நிகழ்ச்சியினை நடத்தியது.
  • இந்த நிகழ்வின் போது, IRDAI தனது மிகவும் இலட்சிய நோக்கமிக்க ‘பீமா டிரினிட்டி’ திட்டத்திற்கான செயல்திட்டத்தை வெளியிட்டது.
  • பீமா டிரினிட்டி ஆனது, பீமா சுகம், பீமா விஸ்தார் மற்றும் பீமா வஹாக் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • பீமா சுகம் ஆனது காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள அனைத்து வகையான காப்பீட்டுத் திட்டங்களின் விற்பனை, சேவை மற்றும் உரிமைக் கோரல்களுக்கான திறந்த  நிலைச் சந்தையாகும்.
  • பீமா விஸ்தார் என்பது மரணம், தனிநபர் விபத்து, சொத்து மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கான காப்பீடுகளை உள்ளடக்கிய முதல் கலப்புக் காப்பீடு திட்டம் ஆகும்.
  • பீமா வஹாக் என்பது பெண்களை மையமாகக் கொண்ட உள்ளூர்மயமாக்கப்பட்ட காப்பீட்டுத் துறை விற்பனைப் பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்