TNPSC Thervupettagam

‘பெண்களின் பாதுகாப்பு’ 2025-26

February 27 , 2024 275 days 299 0
  • 2025-26 ஆம் ஆண்டு வரையில் பெண்கள் பாதுகாப்பிற்கான அதன் மிகவும் முதன்மை  திட்டத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய பதிவின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 4,45,256 வழக்குகள் -சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 51 முதல் தகவல் அறிக்கைகள் - பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 4,28,278 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 3,71,503 ஆகவும் இருந்தது.
  • 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலங்களில் இந்தியாவில் 13.13 லட்சத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் காணாமல் போனதாக பதிவாகியுள்ளது.
  • இது போன்ற சம்பவங்கள் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்