TNPSC Thervupettagam

‘ரிக்கோசெட் தாக்கம்’

May 29 , 2021 1149 days 562 0
  • கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சிக்கும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரமானது வளர்ந்து விட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
  • மேலும் இந்த நெருக்கடியானது வளர்ந்த மற்றும் மேம்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தின் மீது ரிக்கோசெட் என்ற தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
  • தடுப்பு மருந்துகளை நல்ல முறையிலும் சம அளவிலும் பெறுதல் மற்றும் சம அளவிலான மீள்வுத் தன்மை போன்றவற்றை உறுதி செய்தல் போன்றவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு வளர்ந்து விட்ட நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
  • ஏழை நாடுகளின் பொருளாதாரமானது வளாச்சியடையவில்லை என்றாலும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கான அபாயத்தை அவை எதிர்கொண்டுள்ளன.
  • சர்வதேச நாணய நிதியமானது வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள ஒரு சர்வதேச நிதி நிறுவனமாகும்.
  • இதில் 190 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்