‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்' தரவரிசை
July 6 , 2022
876 days
635
- 2020 ஆம் ஆண்டு 'வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டம் (BRAP) ஆனது சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
- 2020 ஆம் ஆண்டு வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டமானது 15 வணிக ஒழுங்குமுறைப் பகுதிகளை உள்ளடக்கிய 301 சீர்திருத்த மதிப்புகளை உள்ளடக்கியது.
- வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டத்தின் அமலாக்கத்தின் அடிப்படையில் முதல் ஏழு சாதனையாளர்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.
- முன்பு 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- ஆந்திரா 98% மதிப்புடன் முதலிடத்திலும், குஜராத் 97.7% மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் தமிழ்நாடு 97% மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Post Views:
635