TNPSC Thervupettagam
December 5 , 2023 209 days 186 0
  • இது இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த நேச நாட்டுப் படைகளின் விமானப் படை வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட் என்னுமிடத்தில் இது திறக்கப்பட்டுள்ளது.
  • இது ‘தி ஹம்ப்’ (மேட்டுப் பகுதி- திமில்) என்று அழைக்கப்படும், வடகிழக்கு அசாம் மற்றும் சீனாவின் யுனான் ஆகியவற்றுக்கு இடையேயான ஆபத்தான விமானப் பாதையில் விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைக்கப் பட்டுள்ளது.
  • அசாமில் உள்ள விமானநிலையங்களில் இருந்து யுனானில் உள்ள விமான தளங்களுக்குப் பறக்கும் வழித்தடத்தில் நேச நாட்டு விமானிகள் எதிர்கொள்ளும் பயங்கரமான சவால்களின் காரணமாக அந்த விமானப் பாதை அப்பெயரைப் பெற்றது.
  • ஹம்ப் விமானப் பாதையானது அசாம், அருணாச்சலப் பிரதேசம், திபெத், மியான்மர் மற்றும் யுனான் (சீனா) வழியாகச் செல்கிறது.
  • இந்த விமான பயணங்கள் 1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டது.
  • இது அமெரிக்க தலைமையிலான நேச நாட்டுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட, விமான வரலாற்றில் மிக முக்கியமான வான்வழிப் பயணங்களில் ஒன்றாக அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்