TNPSC Thervupettagam

“2040 ஆம் ஆண்டிற்குள் நெகிழி மாசுபாட்டை ஒழித்தல்” என்ற அறிக்கை

November 18 , 2023 244 days 228 0
  • பொருளாதார ஒத்தழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, “2040 ஆம் ஆண்டிற்குள் நெகிழி மாசுபாட்டை ஒழித்தல் : ஒரு கொள்கைசார் சூழ்நிலை பகுப்பாய்வு” என்ற இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 21 மில்லியன் டன் (MT) நெகிழிக் குப்பைகள் உலக சுற்றுச்சூழலில் வெளியிடப்பட்டுள்ளது.
  • நெகிழிப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2040 ஆம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலில் அளவில் பெரிய (மேக்ரோபிளாஸ்டிக்) நெகிழி குப்பையின் அளவு 50 சதவீதம் அதிகரிக்கும்.
  • அதாவது, சுமார் 30 மெட்ரிக் டன் நெகிழி சுற்றுச்சூழலில் வெளியிடப்படும். அதில் 9 மெட்ரிக் டன் நீர்வாழ் சூழலில் வெளியிடப்படும்.
  • 2040 ஆம் ஆண்டில், இவற்றை நீக்கும் நடவடிக்கைகளுக்காக உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் செலவாகும்.
  • 2020 மற்றும் 2040 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கழிவு சேகரிப்பு, வகைப்படுத்துதல் மற்றும் சுத்திகரிப்புக்கான முதலீட்டுத் தேவைகள் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்