2025 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 42.01 மில்லியன் நபர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சுமார் 25.27 மில்லியன் பேர் நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், அதற்கான இலக்கில் 89.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்ட உலக உயர் இரத்த அழுத்த தினத்தன்று அரசாங்கம் "75/25" முன்னெடுப்பினை தொடங்கியது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோயால் பாதிக்கப்பட்ட 75 மில்லியன் நபர்களுக்கு தரப்படுத்தப்பட்டச் சிகிச்சையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.