TNPSC Thervupettagam
July 9 , 2020 1604 days 562 0
  • இது ஜிலெட் அறிவியல் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தின் ஒரு பொதுவான பதிப்பாகும்.
  • இது இந்தியாவில் கோவிட் – 19 நோய்த் தொற்றுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கான ஒரு மருந்தாகும்.
  • உலகளாவிய மருந்து நிறுவனமான மைலன் N.V என்ற நிறுவனத்திற்கு இந்தியத் தலைமை மருத்துக் கட்டுப்பாட்டகத்தினால் (DGCI - Drug Controller General of India) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தற்பொழுது மைலன் N.V. ஆனது மரபியல்சார் மருந்துகளை உற்பத்தி செய்வதில் உலகின் 2வது மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது.
  • DESREM ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப் படுவதற்காக வேண்டி DCGI-ன் அனுமதியைப் பெற்ற ரெம்டெசிவிரின் 3வது மரபியல்சார் பதிப்பாகும்.
  • இதற்கு முன்பு, சிப்லாவின் சிப்ரெமி மற்றும் ஹெட்டிரோவின் “கோவிபார்” ஆகிய இந்திய மருந்து நிறுவனங்களின் மரபியல்சார் மருந்துகள் DCGIயின் அனுமதியைப் பெற்றுள்ளன.
  • கோவிட் – 19 நோய்த் தொற்று சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்திற்கு ஒப்புதல் அளித்த முதலாவது நாடு ஜப்பான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்