TNPSC Thervupettagam

“EAST” – சீனாவின் செயற்கைச் சூரியன்

June 7 , 2021 1177 days 589 0
  • சீனாவின் EAST (Experimental Advanced Superconducting Tokamak) அணுக்கரு உலை என்பது ஒரு மேம்பட்ட அணுக்கரு இணைவு சோதனைக்கான ஆராய்ச்சிக் கருவியாகும்.
  • East Tokamak என்ற உலையானது சூரியனின் ஆற்றல் உற்பத்தி செயல்முறையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது சூரியன் மற்றும் நட்சத்திரங்களால் மேற்கொள்ளப்படும் அணுக்கரு இணைவு செயல்முறையைப் பிரதிபலிக்கின்றது.
  • இது 101 விநாடிகளுக்கு 216 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் (120 மில்லியன் டிகிரி செல்சியஸ்) இயங்கி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • இது நாட்டில் தற்போது இயங்கி வரும் மூன்று உள்நாட்டு தொகாமக் (Tokamak) வகை உலைகளில் ஒன்றாகும்.
  • மற்ற இரு தொகாமக் உலைகள் HL-2A உலை மற்றும் J-NEXT ஆகியவையாகும்.
  • மேலும் 2020 ஆம் ஆண்டில் தென்கொரியாவின் KSTAR உலையானது 20 விநாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் பிளாஸ்மா வெப்பநிலையில் இயக்கப்பட்டு சாதனை ஒன்றைப் படைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்