ஜனா சிறு நிதியியல் வங்கியானது இந்தியா முழுவதுமுள்ள தனது அனைத்து நுகர்வோர்களுக்காக “I Choose My Number” (நான் எனது எண்ணினைத் தேர்வு செய்வேன்) எனும் வசதியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான எண்களை அவர்களின் வங்கிக் கணக்கு, சேமிப்பு (அ) நடப்புக் கணக்கு எண்ணுடைய கடைசி 10 இலக்கங்களாகத் தேர்வு செய்வதற்கு இது அனுமதி வழங்கும்.
நுகர்வோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எண்ணினை ஒதுக்குவதானது அந்த எண்ணினுடைய இருப்பினைப் பொறுத்ததாகும்.
ஜனா சிறு நிதியியல் வங்கி
இது 2006 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது.
ஜனா சிறு நிதியியல் வங்கியின் முழக்கமானது “பைசா கி கதர்” (Paise Ki Kadar) என்பதாகும்.