யுனெஸ்கோ அமைப்பானது 2024 ஆம் ஆண்டிற்கான பாலினம் சார்ந்த உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கைக்கு "Technology on her Terms" என பெயரிடப்பட்டுள்ளது.
பெண்களின் கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாட்டில் தொழில் நுட்பத்தின் தாக்கத்தை அறிக்கை ஆராய்கிறது.
சமூக ஊடகங்கள் பெண்களின் கல்வியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வையும் அது எதிர்மறையாகப் பாதிக்கிறது.
இளம் பெண் பட்டதாரிகளில் 15 சதவீதம் பேர் STEM தொழில்துறையில் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற நிலையில் STEM தொழில்துறையில் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் பட்டதாரிகளின் சராசரி பங்கு 35 சதவீதம் ஆகும்.
அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரியும் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது என்பதோடு, 2022 ஆம் ஆண்டில் இந்தத் துறைகளில் பெண்களின் பங்கு 25 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.