TNPSC Thervupettagam

“அம்மா கோவிட் ஹோம் கேர்” திட்டம்

July 11 , 2020 1655 days 671 0
  • இது வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த உதவிகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும்.
  • இது ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றது.
  • இந்தத் திட்டத்தின்படி, வீட்டுக் கண்காணிப்பில் உள்ள மக்களுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகமானது ரூ.2,500க்கு வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டகமானது உடலில் இதயத்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியப் பயன்படும் பல்ஸ்-ஆக்ஸிமீட்டர், வெப்பநிலையை அறிய உதவும் டிஜிட்டல் தெர்மோ மீட்டர், விட்டமின் C, சிங்க் மற்றும் விட்டமின் D போன்ற மாத்திரைகள், நோய் எதிர்ப்புச் சக்திக்கான அதிமதுரப் பொடி, கபசுரக் குடிநீர், உடல் நலத்திற்கான 14 நாட்களுக்கான அமுக்கரா மாத்திரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்