TNPSC Thervupettagam

“இந்திய மருந்தியல் நூல்” - முதலாவது அங்கீகாரம்

December 23 , 2019 1671 days 692 0
  • ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பொது சுகாதார அமைச்சகத்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரத் தயாரிப்புகளின் தேசிய ஒழுங்குமுறை ஆணையமானது இந்திய மருந்தியல் நூலை (Indian Pharmacopoeia - IP) முதல் முறையாக அங்கீகரித்துள்ளது.
  • IP என்பது அடையாளம், தூய்மை மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கான தரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புத்தகமாகும்.
  • இதன் மூலம், ஆப்கானிஸ்தான் நாடானது IPயை அங்கீகரித்த முதல் நாடாக உருவெடுத்துள்ளது.
  • இதனை மத்திய வணிகத் துறை மற்றும் மத்திய சுகாதார & குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் சார்பாக இந்திய மருந்தக ஆணையமானது வெளியிடுகின்றது.
  • 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டம் மற்றும் 1945 ஆம் ஆண்டு விதிகள் ஆகியவற்றின் கீழ் இந்தப் புத்தகத்தின் தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்