TNPSC Thervupettagam

“ஒரு மாவட்டம், ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் மஞ்சள்

August 25 , 2020 1611 days 879 0
  • ஈரோடு மஞ்சளானது மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமான  ஒரு மாவட்டம், ஒரு பொருள்என்ற அணுகுமுறையின் (ODOP - one district one product) கீழ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • அதே போல நீலகிரி மாவட்டத்திற்காக வேண்டி கேரட் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகமானது பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களை முறைப்படுத்துதல் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து உள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப் படுகின்றது.
  • ODOP ஆனது ஒரு மாவட்டத்தில் இருக்கும் நுண் உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக நிதி, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கு வேண்டிய ஆதரவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கைகளுக்காக மத்திய அரசானது 60% நிதியையும் மாநில அரசானது 40% நிதியையும் அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்