தலைமைச் செயலாளரைத் தலைவராகக் கொண்ட ‘ஒரே சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான உத்திசார் குழுவை’ மாநில அரசு அமைத்துள்ளது.
23 பேர் கொண்ட இந்தக் குழுவானது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பொது சுகாதாரச் சவால்களுக்கு விரிவான பல எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சௌமியா சுவாமிநாதன், G.சுந்தர்ராஜன், கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் WASH நிபுணர் அனன்யா கோஷல் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் இக்குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
நிலப் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் கூடிய பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆனது, மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்களின் தோற்றத்திற்கு வழி வகுக்கும்.