2011 ஆம் ஆண்டில் சிலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது அண்டார்டிகாவின் செய்மோர் தீவில் ஒரு புதை படிவத்தை (68 மில்லியன் ஆண்டுகள் பழமையான முட்டை) கண்டுபிடித்துள்ளது.
அன்று முதல் இந்தப் புதை படிவமானது சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு “தி திங்” (The Thing) என்று பெயரிடப்பட்டுள்ளது.
வடிவத்தின் அடிப்படையில் (29 by 20 செ.மீ) இரண்டாவது மிகப்பெரிய முட்டை இதுவாகும்.
மடகாஸ்கர் யானைப் பறவை முட்டைக்கு (அழிந்து போனது) அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய முட்டை இதுவாகும். மேலும் மிகப்பெரிய மென்மையான ஓட்டைக் கொண்ட முட்டை இதுவாகும்.