TNPSC Thervupettagam

“பசுமை (சுற்றுச்சூழல் சார்ந்த) மன்றம்” என்ற ஒரு திட்டம்

December 26 , 2019 1799 days 796 0
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது (Ministry of Environment, Forest and Climate Change - MoEFCC) முதன்முறையாக “பசுமை (சுற்றுச்சூழல் சார்ந்த) மன்றம்” (Ecoclub) என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தும் மாநிலத் தலைமை நிறுவனங்களின் ஒரு வருடாந்திரக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
  • பசுமை மன்றமானது சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு மற்றும் பயிற்சியின் (EEAT - Environment Education Awareness and Training - EEAT) கீழ் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கூட்டமானது குஜராத்தில் உள்ள GEER என்ற அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது “பசுமை மன்றங்களின் பார்வை” மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடுகள் & நிகழ்ச்சிகள் குறித்த கையேடு ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப் பட்டன.
  • தேசிய பசுமைப் படையானது (National Green Corps - NGC) MoEFCC ஆல் தொடங்கப்பட்டது. இந்தப் படையானது இந்தியா முழுவதும் 1,20,000 பள்ளிகளை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்