ஹரியானாவின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சரான அனில் விஜ் ஆகியோர் தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது “பணிகள் மேலாண்மை அமைப்பை” தொடங்கியுள்ளனர்.
இது ஹரியானாவின் நகர உள்ளாட்சி அமைப்புகளின் (ULB - Urban Local Bodies) மேம்பாட்டுப் பணிகளின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பிற்கான இணைய அடிப்படையிலான, காகிதமற்ற மற்றும் மையப்படுத்தப்பட்ட ஒரு இணைய வாயிலாகும்.
இந்த மையப்படுத்தப்பட்ட இணையதளமானது ஹரியானாவில் உள்ள ULBகளின் அனைத்துப் பணிகளையும் ஒரு ஒற்றைத் தளத்தில் கொண்டு வரும் பணியை மேற்கொள்ளும். மேலும் அப்பணிகளை நிறைவு செய்வதில் ஏற்படும் எந்தவொரு கால தாமதமும் இந்தத் தளத்தில் காண்பிக்கப்படும்.