“பழுப்பு நிறத்திலிருந்து பச்சை நிறம்” என்ற ஒரு அறிக்கை – இந்தியா
November 13 , 2019 1842 days 672 0
ஒரு உலகளாவிய அரசு சாரா நிறுவனமான “க்ளைமேட் டிரான்ஸ்பரன்சி” என்ற அமைப்பானது “பழுப்பு நிறத்திலிருந்துப் பச்சை நிறம் - 2019” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலையானது 1.5° செல்சியஸுக்கு மேல் உயராது என்பதை உறுதி செய்யும் ஒரே ஜி20 நாடு (ஜி20 அமைப்பில் உள்ள) இந்தியா என்று அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
புவி வெப்பமயமாதலுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தால் இந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ஜி20 அமைப்பில் உள்ள நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் பெரிய அளவிலான கார்பன் உமிழ்வுகளைக் கொண்டுள்ளன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இந்தியா முதலீடு செய்ததற்காக இந்த அறிக்கையானது இந்தியாவைப் பாராட்டியுள்ளது.