சென்னையில் ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் உலர்த்தி மற்றும் வெப்பத்தாற்பகுப்பு சோதனை ஆலைக்கான (Pyrolysis pilot plant) அடிக்கல் நாட்டப்பட்டது.
இச்சோதனை ஆலையானது இந்தோ-ஜெர்மானிய திட்டமான “பைரசோலின்” ஓர் அங்கமாகும்.
இத்திட்டம் இந்தோ-ஜெர்மானிய அறிவியல் & தொழில்நுட்ப மையத்தினால் CSIR-CLRI நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் திறன்மிகு நகரங்களிலும் மற்ற நகர்ப்புற மையங்களிலும் நகர்ப்புற கரிமக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கசடுகளை உயிரிக் கரிமப் பொருட்களாகவும் (Biochar) ஆற்றலாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இத்திட்டம் வழி வகுக்கும்.