TNPSC Thervupettagam

“போக்குவரத்துத் துறையில் கரிமநீக்கத்தினை நோக்கிய நடைமுறைகள்- 2023” அறிக்கை

August 4 , 2023 353 days 210 0
  • நிதி ஆயோக் அமைப்பின் “போக்குவரத்துத் துறையில் கரிம நீக்கத்தினை நோக்கிய நடைமுறைகள் - 2023” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது முன்வைக்கப்பட்ட நிலையானப் போக்குவரத்து குறித்த உலகளாவிய விவாதங்களை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போக்குவரத்துத் துறையில் கரிம நீக்கம் என்பது போக்குவரத்துத் துறையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் அல்லது நீக்கும் செயல்முறையைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்தப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் இந்தியாவின் போக்குவரத்துத் துறையானது 14-15% பங்கினைக் கொண்டுள்ளது.
  • போக்குவரத்துத் துறைகளில், சாலைப் போக்குவரத்து ஆனது மொத்தக் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்