ஹைதராபாத்தில் இயங்கி வரும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular Molecular Biology - CCMB) நிறுவன இயக்குனரான புஷ்பமித்ரா பார்கவா மறைந்தார்.
நாட்டின் உயிர் தொழில்நுட்பத்தில் கரைதேர்ந்த இவரின் சேவை காரணமாக 1970 ல் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உயிரி தொழில்நுட்பத்திற்கென்று தனியாகத் துறை ஒன்று உருவாக்கப்பட்டது.
2005ல், இந்தியாவின் Assisted Reproductive Technology தொழில்நுட்ப சிகிச்சை மையங்களை (ART clinics) ஒழுங்குபடுத்துவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) வரைவு விதிமுறை உருவாக்கலில் பெரும்பங்கினை ஆற்றியுள்ளார்.