To read this article in English : Click Here
அம்மா இரு சக்கர வாகனம்
- இத்திட்டம் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தின் போது (2018, பிப்ரவரி 24) தொடங்கி வைக்கப்பட்டது.
- பணியில் இருக்கும் பெண்களுக்காக ரூ. 25,000 வரை 50 சதவிகித மானியம் அளிக்கப்படும்.
- ஓட்டுநர் உரிமம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ஆகியன இத்திட்டத்திற்கான தகுதிகள்.
- வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள்.
- மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் இத்திட்டத்தில் உள்ளடங்குவர்.
குடிமராமத்துத் திட்டம்
- இத்திட்டம் உள்ளூர் விவசாயிகளின் உதவியுடன் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2018 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி இத்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இது கால்வாய்கள், தொட்டிகள், அடைப்புக் கதவுகள் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- இத்திட்டத்தின் முதல் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின்படி, பயனாளிகள் அல்லது விவசாயிகள் தமது பங்காக 10 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- இந்த பங்களிப்பானது நிதி, உழைப்பு அல்லது பொருள் என எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
- மேலும் இத்திட்டமானது உலக வங்கியிடமிருந்தும் நிதியுதவியைப் பெறுகிறது.
- நீர் நிலைகளில் உள்ள களைகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலைகளை வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
சத்துணவுத் திட்டம்
- இது மதிய உணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி ஆரம்ப நிலைப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்காகவும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிப் பருவத்திற்கு முந்தைய நிலையிலான 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்காகவும் தொடங்கப்பட்டது.
- 09.1982லிருந்து நகர்ப்புறங்களில் உள்ள சத்துணவு மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
- 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 10 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆண்டு முழுவதும் சத்துணவைப் பெறுவர் (விடுமுறை நாட்களைத் தவிர).
- ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மதிய உணவைப் பெறுவர்.
குறிக்கோள்கள்
- மாநில அளவில் ஆரம்பக் கல்வி நிலையை அடைதல், கல்வி கற்பதை மேலும் ஊக்குவித்தல், பள்ளியில் சேருவதை ஊக்குவித்தல், கல்வி கற்பதைத் தக்க வைத்தல் மற்றும் இடை நிற்றலைக் குறைத்தல்.
- பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சத்துணவை கிடைக்கச் செய்வதன் மூலம் குழந்தைகள் இறப்பு, நோயுற்ற தன்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை குறைக்க முடியும்.
- ஊட்டச்சத்தின் நிலையை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறனை வளர்ச்சி பெறச் செய்தல்.
- குறைபாடுகளினால் ஏற்படும் நோய்கள் உட்பட அனைத்து நோய்களையும் எதிர்த்துப் போராடுதல்.
- கல்வி கற்றலில் உள்ள பாலின இடைவெளியைக் குறைத்தல்.
- பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கூட்டாக உணவு பரிமாறுவதன் மூலம் நேர்மறை சிந்தனைகள் மற்றும் சகோதர உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.
தினம் மற்றும் உணவுப் பட்டியல்
- திங்கள் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்)
- செவ்வாய் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் வேக வைக்கப்பட்ட 20 கிராம் பச்சைப் பயிறு அல்லது கொண்டைக் கடலை.
- புதன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்).
- வியாழன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்).
- வெள்ளி : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் 20 கிராம் வேக வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு.
தமிழ்நாடு முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
- முன்பு சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்பட்டது.
- பெண் குழந்தையின் கல்வியை ஊக்குவித்தல்.
- பெண் சிசுக் கொலையை ஒழித்தல்
- ஆண் குழந்தைக்கான முன்னுரிமையை தடுத்தல்.
- ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தையின் நலனை ஊக்குவித்தல் மற்றும் பெண் குழந்தையின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- 18 வயதிற்கு மேல் மட்டுமே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தல்.
தகுதி வரம்புகள்
- ஆண் குழந்தை இல்லாமல் ஒரேயொரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பம்.
- இத்திட்டத்தின்கீழ் குழந்தையைச் சேர்க்கும் நேரத்தில் குழந்தை 3 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000ற்கு மேல் இருக்கக் கூடாது.
- குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் தனது 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும்.
திட்டம் - I
- 08.2011 அன்று அல்லது அதற்கு மேல் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் மூலம் வைப்பு நிதியாக இந்நிதி சேமித்து வைக்கப்படும்.
- இது ஒரேயொரு பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- இந்த வைப்பு நிதிக்கான பற்றுச் சீட்டின் இரசீது பெண் குழந்தையின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும்.
திட்டம் - II
- 08.2011 அன்று அல்லது அதற்கு மேல் பிறந்த இரு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.25,000 வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
- தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் மூலம் வைப்பு நிதியாக இந்நிதி சேமித்து வைக்கப்படும்.
- இது இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- இந்த வைப்பு நிதிக்கான பற்றுச் சீட்டின் இரசீது குழந்தைகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும்.
இரு திட்டங்களுக்கும் சேர்த்து
- ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த வைப்பு நிதி புதுப்பிக்கப்பட வேண்டும்.
- குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் இந்த வைப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை அந்த பெண்ணிற்கு அளிக்கப்படும்.
- இந்தப் பயனைப் பெற அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
- எனவே இந்த முதிர்வுத் தொகையானது அந்தப் பெண் உயர் கல்வி பயில உதவி செய்யும்.
- இந்த வைப்புத் தொகை இருப்பு வைக்கப்பட்ட 6-வது ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1800 அந்தப் பெண்ணிற்கு ஊக்கத் தொகையாக அளிக்கப்படும்.
- வருடாந்திர வருமான வரம்பு ரூ.72,000/- ஆகும்.
முடிவுகள்
- பெண் கல்வியானது 2001 ஆம் ஆண்டில் 64.55%லிருந்து 2011 ஆம் ஆண்டில் 73.44% ஆக உயர்ந்துள்ளது.
- பெண் குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் குறைந்துள்ளது.
தொட்டில் குழந்தைத் திட்டம்
- இந்த திட்டம் 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2011 ஆம் ஆண்டில் கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிக்கோள்கள்
- பாலின சமத்துவம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பெண் குழந்தைகளுக்கு சமூக மேம்பாட்டை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயனாளிகள்
- கைவிடப்பட்ட மற்றும் சரணடைந்த பெண் குழந்தைகள்
தகுதிகள்
- கைவிடப்பட்ட பெண் குழந்தைகளைப் பெறுவதற்காக வரவேற்பு மையங்கள், மாவட்ட சமூக நல வாரிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல இல்லங்களில் இந்த தொட்டில்கள் வைக்கப்படும்.
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/மையங்களில் வைக்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் தகுதியுள்ள பெற்றோர்களால் தத்தெடுக்கப்படும்.
- தத்தெடுப்பிற்கு வழங்கப்படாத நிலையில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவர்களது பராமரிப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு நல மையங்களுக்கு அளிக்கப்படும்.
- அரசு சாரா அமைப்புகள்/குடிமக்கள் ஆகியோர் இந்த தொட்டிலில் குழந்தைகளை வைப்பதற்கு ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.
- மாவட்ட சமூக நல அதிகாரிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளுக்குத் தகவல்களை அளிக்கும் அதிகாரிகளாவர்.
- இந்த தொட்டில் குழந்தை மையங்களை அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.47.45 இலட்சமாகும். ஒவ்வொரு மையமும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு துணை செவிலியர், ஒரு துணை உதவியாளர், இதர பணியாளர்கள் மற்றும் தேவையான பால் பொடி, மருந்துகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
முடிவுகள்
- குழந்தை பாலின விகிதம் 2001 ஆம் ஆண்டில் 942/1000 என்பதிலிருந்து 2011 ஆம் ஆண்டில் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.

தாய் திட்டம்
- இது தமிழ் நாடு கிராம உறைவிட மேம்பாடு என்று அழைக்கப்படுகிது.
- இது 2011-12 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
- இது வளங்களை சமமற்ற முறையில் வழங்குதலில் உள்ள குறைபாடுகளைக் களைகிறது. மேலும் இது அனைத்து உறைவிடங்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.
- உறைவிட வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலமும் இந்த மாதிரியான ஒரு புத்தாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதில்லை.
குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகள்
- குடிநீர் விநியோகம்
- தெரு விளக்குகள்
- சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்
- இணைப்புச் சாலைகள்
- மயானம்/எரியூட்டு இடங்கள்
- எரியூட்டு இடத்திற்குச் செல்லும் வழிகள்
அம்மா திட்டங்கள்
அம்மா திட்டம்
- 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
- இது அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்புநிலை மனிதர்களுக்கு அதிகபட்ச சேவைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள்.
கிடைக்கப் பெறும் சேவைகள்
- பட்டா மாறுதல்கள்
- குடும்ப அட்டைகள் – திருத்தங்கள்
- பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள்
- சாதிச் சான்றிதழ்கள் / வருமானச் சான்றிதழ்கள் / இருப்பிடச் சான்றிதழ்கள் / குடியிருப்புச் சான்றிதழ்கள்
- வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- முதியோர் ஓய்வூதியம்
- விவசாயிகளுக்கான சான்றிதழ்கள்
அம்மா உணவகம்
- இது 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தின்கீழ் மாநில மாநகராட்சிக் கழகங்களினால் செயல்படுத்தப்படும் உணவகங்களில் மானிய விலையிலான உணவுகள் குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்கப்படும்.
- அனைத்து மாநகராட்சிக் கழகங்கள்.
அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்
- இது 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் ரூ.1000 மதிப்பிலான 16 வகையான கருவிகளைப் பெறுவார்கள்.
- மேலும் இப்பெட்டியானது ஒரு கைக்குட்டை, ஆடை, படுக்கை, கொசு வலை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சோப்பு, சுத்திகரிப்பான், ஒரு பொம்மை, மருந்துகள் (குழந்தை மற்றும் தாய்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
அம்மா குடிநீர்
- 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அண்ணாதுரையின் 105-வது பிறந்த தினத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.
- சுத்தமான குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகித்தல் திட்டம்.
- இத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்து ஒரு லிட்டர் நெகிழிப் புட்டிகளில் அடைத்து நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அவை விற்பனை செய்யப்படும்.
- ஒரு லிட்டர் புட்டியின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள உற்பத்தி ஆலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் இது செயல்படுத்தப்படுகிறது.
- நகரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாகப் பெறுவார்கள்.
- முதல் பகுதியாக இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சென்னையில் 100 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- நீரில் மொத்தம் கரைந்த திடப் பொருட்கள் 50 ppm (Parts per million) அளவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அம்மா உப்பு
- இது நலிவடைந்த பிரிவினர் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு உப்புக் கழகத்தினால் 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- மூன்று வகை: இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் உப்பு மற்றும் குறைந்த அளவுள்ள சோடியம் உப்பு ஆகியவை முறையே ரூ.25, ரூ.21, ரூ.14 ஆகியவற்றிற்கு விற்கப்படுகின்றன.
- தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு இது ஊக்கமளிக்கிறது.
- சமூகத்தில் உள்ள பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக வேலை வாய்ப்புகளை இது உருவாக்குகிறது.
- உப்பு உற்பத்தி, உப்பு சார்ந்த பொருட்கள் மற்றும் கடல் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக கடல் வளங்களைப் பெருமளவில் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்
- இது 11.01.2016 அன்று விலை மட்டுப்படுத்துதல் நிதியத்தின் கீழ் (Price Stabilization Fund) தமிழ்நாடு உணவுப் பொருள் விநியோக கழகத்தினால் 25 மாவட்டங்களில் 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் தொடங்கப்பட்டன.
- இது குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
அம்மா சிமெண்ட்
- இது 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
- இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- மிகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாயை ஈட்டும் குழுக்கள் மானிய விலையில் சிமெண்டைப் பெறுவதற்கு இது உதவுகிறது.
- அம்மா சிமெண்ட்டின் ஒரு மூட்டையின் விலை ரூ.190 ஆகும்.
- இந்த சிமெண்ட்டானது தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழக நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
- ஒரு சிமெண்ட் மூட்டையின் உண்மையான மதிப்பு ரூ.360 ஆகும். ஆனால் இத்திட்டத்தின் கீழ் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை பாதியாகக் குறைந்துள்ளது.
- தாம் கட்டும் வீடுகளுக்காக நுகர்வோர்களுக்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகளும் 1500 சதுர அடிக்கு 750 சிமெண்ட் மூட்டைகளும் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் குறைந்தபட்சம் 10 சிமெண்ட் மூட்டைகளையும் அதிகபட்சமாக 100 சிமெண்ட் மூட்டைகளையும் பெற முடியும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும்.
- மாநிலத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறையின் 250 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும்.

அம்மா விதைகள் திட்டம்
- அம்மா விதைகள் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 02 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- தமிழக மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட விதைளைப் பயன்படுத்துவதை இது ஊக்கப்படுத்துகிறது.
- நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளின் மேல் தளங்களில் (மாடியில்) காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதை இது ஊக்கப்படுத்த விருக்கிறது.
- இந்த விதைகள் நியாயமான விலையில் அம்மா சேவை மையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு விதைகள் வளர்ச்சி கழகம் பொறுப்பு நிறுவனமாக செயல்படும்.
- திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள குடிமக்கள் தங்களின் மாடிகளில் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அம்மா மருந்தகம்
- இது 2014 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த மருந்தகங்கள் மரபியல்பான மற்றும் நிறுவன அடையாளம் கொண்ட அனைத்து வகை மருந்துகளையும் குறைவான விலையில் விற்பனை செய்கின்றன.
- இந்த மருந்தகங்கள் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்கின்றன.
- இந்த திட்டத்தின் மூலம் தினக்கூலித் தொழிலாளர்கள் பெரியளவில் பயனடைகிறார்கள்.
- இந்த மருந்தகங்கள் சென்னை, ஈரோடு, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளன.
அம்மா தகவல் மையம்
- இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- கட்டணமில்லா தொலைபேசி எண் – 1100.
- இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்.
- இத்திட்டம் தொடக்க நிலையில் ஒரு நாளைக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும்.
- இது குடிமக்கள் அரசாங்கத் துறைகள் குறித்த புகார்களை அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- குடிமக்களிடமிருந்துப் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
- புகார் அளித்த குடிமக்களுக்குப் புகார் குறித்துத் தகவல் அளிக்கப்பட வேண்டிய அதிகாரி பற்றியும் புகார் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைப் பற்றியும் தெரிவிக்கப்படும்.
- முதல்வர் குறைதீர் பிரிவில் குடிமக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ அளிக்கலாம். எனவே அம்மா தகவல் மையம் முதல்வர் குறைதீர் பிரிவின் நீட்டிப்பு என்று கருதப்படுகிறது.
அம்மா சேவை மையம்
- இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது.
- இது அம்மா மக்கள் சேவை மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
- நகர்ப்புற மக்களுக்காக மாநகராட்சிகள் ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த மையங்களைச் செயல்படுத்தும்.
- பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், குடும்ப அட்டைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், கட்டிடத்திற்கான அனுமதிப் பத்திரம் போன்ற பல்வேறு பொதுச் சேவைகளை வழங்குவதற்கு இது வசதியளிக்கிறது.
- இந்த சேவை மையங்களின் நோக்கம் அதிகாரிகளின் பயணங்களின் போது அவர்களை சந்திக்க முடியாமல் உள்ள மக்களுக்கு உதவுவதும் சேவை வழங்குதலில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதும் ஆகும்.
அம்மா காய்கறிக் கடைகள்
- இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
- இது பசுமைப் பண்ணை நுகர்வோர் கூட்டுறவுக் கடை அல்லது தூய விவசாயக் கூட்டுறவுக் கடை என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த நியாய விலைக் காய்கறிக் கடைகள் சென்னை மற்றும் துணை நகரங்களில் சந்தை விலையை விடக் குறைவாக தூய விவசாயக் காய்கறிப் பொருட்களை விற்பனை செய்கின்றன.
- இந்த காய்கறிக் கடைகளுக்குத் தேவையான பொருட்களை அரசாங்கத் துறைகள் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு) நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்.
- இதன்மூலம், அரசாங்கம் தரகர்களின் இடையீட்டை ஒழித்துப் பொருட்களின் விலையை தனது கட்டுக்குள் வைத்திருக்கும்.
அம்மா சிறு கடன்கள் திட்டம்
- இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டமானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறு கடன்களை அளிக்கும்.
- இதன்மூலம் வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 5000 ரூபாய் வரை கடன்களைப் பெற முடியும். இந்த கடனுக்கான 11 சதவிகித வட்டியை அரசாங்கம் அந்த வங்கிக்குச் செலுத்தும்.
- இந்தக் கடனைப் பெற்ற வணிகர்கள் வாரத்திற்கு ரூபாய் 200 வீதம் 25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
- 25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாத வணிகர்களிடம், செலுத்தாமல் மீதமுள்ள தொகையுடன் 4 சதவிகிதம் வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
- குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திய வணிகர்கள் ரூ.25,000 வரை மீண்டும் கடன் பெறலாம்.
- பூக்களை விற்பனை செய்வோர், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வோர் மற்றும் இதர சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
- இத்திட்டத்தின் நோக்கம் வட்டிக் கடைகாரர்களிடமிருந்து உயர்ந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறு வர்த்தகர்களுக்கு உதவுவதாகும்.
அம்மா கைபேசிகள்
- இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின்கீழ் ஒரு கேமிரா (புகைப்படக் கருவி), ஜிபிஆர்எஸ் மற்றும் மூன்றாம் தலைமுறை சிம் கார்டுடன் கூடிய கைபேசி வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ், தமிழ் மென்பொருள் பதிவேற்றப்பட்ட இந்த கைபேசியானது முதல் நிலையில் 20,000 சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. இதன் மதிப்பு 15 கோடியாகும்.
- இந்த கைபேசியின் பயன்பாட்டிற்கான மாதச் செலவு தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழகத்தினால் ஏற்கப்படும்.
அம்மா மடிக் கணினிகள்
- இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்காக 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- சிறந்த திறன்களைப் பெறுவதற்காக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் உள்பட பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து இளங்கலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்திற்கு எல்காட் (ELCOT) பொறுப்பு நிறுவனமாக செயல்படுகிறது.
- தமிழ்நாட்டைத் தவிர குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதைப் பின்பற்றுகின்றன.
அம்மா உடற்பயிற்சி மையம்
- 07.2018 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தின் கொங்கணாபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- அம்மா பூங்காக்களில் உள்ள இடங்களில் அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படும்.
அம்மா உடற்பயிற்சியகத்தின் நன்மைகள்
- இது கிராமப்புற இளைஞர்களின் உடற்பயிற்சிக்கு உதவி செய்து, தங்கள் உடற்திறனை மேம்படுத்த உதவுகிறது.
- இது கிராமப்புற மக்களிடையே சுகாதாரம் குறித்த அறிவை அதிகரிக்கிறது.
- இளைஞர்களின் தலைமைப் பண்பு மற்றும் மன உறுதியை இது மேம்படுத்துகிறது.
- இது இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் செய்கிறது.
Post Views:
24689